ஜனாதிபதி மக்ரோனின் டுவிட்டர் சமூகவலைத்தளத்தை பயன்படுத்த அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி தேர்தலுக்கான பிரச்சாரத்தை கண்காணிக்கும் தேசிய ஆணையம் (La Commission nationale de contrôle de la campagne électorale en vue de l'élection présidentielle) இந்த தடையை விதித்துள்ளது. அதன்படி, பிரெஞ்சு ஜனாதிபதிக்கு என உருவாக்கப்பட்ட டுவிட்டர் கணக்கை மக்ரோன் இன்று முதல் (மார்ச் 11) பயன்படுத்த முடியாது.
ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் மீண்டும் தேர்தலில் போட்டியிடுவதால், இந்த டுவிட்டர் கணக்கை பயன்படுத்தி அவர் பிரச்சாரத்தில் ஈடுபடுவதை தவிர்க்கவே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
மாறாக ‘இம்மானுவல் மக்ரோன்’ எனும் பெயரில் உள்ள அவரது தனிப்பட்ட டுவிட்டர் கணக்கை அவர் தொடர்ந்தும் பயன்படுத்த முடியும் எனவும், அதை பிரச்சாரத்துக்காகவும் பயன்படுத்த முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.