கடந்த 24 மணிநேரத்தில் பதிவான கொரோனா தொற்று மற்றும் சாவு விபரங்களை Santé publique France வெளியிட்டுள்ளது.
அதன்படி, கடந்த சில நாட்களாக வீழ்ச்சியடைந்திருந்த கொரோனா தொற்று இந்த 24 மணிநேரத்தில் திடீரென அதிகரித்து, 93,050 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது.
மருத்துவமனையில், கடந்த 24 மணிநேரத்தில் 1,312 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தற்போது மொத்தமாக 21,208 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அவசர சிகிச்சைப் பிரிவில், 24 மணிநேரத்தில் 125 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தற்போது இங்கு மொத்தமாக 2,036 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அதேவேளை, கடந்த 24 மணிநேரத்தில் 167 பேர் மருத்துவமனைகளில் சாவடைந்துள்ளனர். பிரான்சில் இரண்டு வருடங்களுக்கு மேலாக கொரோனா பரவல் இருந்து வரும் நிலையில், இதுவரை 139.618 பேர் சாவடைந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது