கொரோனா தொற்றின் காரணமாக பிரான்சில் 3080 வகுப்பறைகள் மூடப்பட்டுள்ளன.

பாடசாலை மாணவர்களிடையே கொரோனா தொற்று தீவிரமடைந்துள்ளதாக தேசிய கல்வி அமைச்சகம் அறிவித்துள்ளது. கடந்தவாரத்தில் 52,669 மாணவர்கள் கொரோனா தொற்றுக்குள்ளாகி தனிமைப்படுத்தலில் இருந்த நிலையில், இவ்வாரத்தில் 81,424 மாணவர்கள் தொற்றுக்குள்ளாகியுள்ளனர்.

ஆசியர்களிடையே பதிவாகும் தொற்றும் அதிகரித்துள்ளது. கடந்தவாரத்தில் 6,199 ஆசிரியர்களுக்கு தொற்று ஏற்பட்டிருந்த நிலையில், இந்த வாரத்தில் 10,201 ஆசியர்கள் தொற்றுக்குள்ளாகியுள்ளனர்.

அதேவேளை, முந்தைய வாரத்தோடு ஒப்பிடுகையில் மூடப்பட்டுள்ள வகுப்பறைகளின் எண்ணிக்கை ஓரளவு வீழ்ச்சியடைந்துள்ளபோதும், பிரான்சில் இன்னமும் 3,080 வகுப்பறைகள் கொரோனா தொற்றின் காரணமாக மூடப்பட்டுள்ளதை அமைச்சகம் உறுதி செய்துள்ளது.

இந்த புதிய கல்வி ஆண்டில் இருந்து மாணவர்கள் பாடசாலைகளில் முகக்கவ அணிவது கட்டாயமில்லை என அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.