பிரான்ஸில் இருந்து பெற்றோருடன் யாழ்ப்பாணம் சென்ற பெண் ஒருவர் காணாமல் போயுள்ளார்.19 வயதான பிரான்ஸில் பிறந்த மேற்படி பெண் விடுமுறையில் தாய் தந்தையருடன் யாழ்ப்பாணம் சென்றுள்ளார்.அங்கு தந்தையின் சகோதரி வீட்டில் தங்கியிருந்த நிலையில் மேற்படி சம்பவம் நடைபெற்றுள்ளது.
பெண்ணின் பெற்றோர் காவல்நிலையத்தில் தமது பெண் காணாமல் போயுள்ளதாக முறைப்பாடு கொடுத்த நிலையில் அதே வீட்டில் வசிக்கும் முறை மச்சான் ஒருவரும் காணாமல் போயுள்ளதாக அவரது பெற்றோர் முறைப்பாடு கொடுக்க வந்துள்ளனர்.
பின்னர் நடந்த விசாரணைகளில் இருவரும் திடீர் காதல் தொடர்புகளில் இருந்திருக்கலாம் என்றும் திருமணம் செய்யும் நோக்கில் சென்றிருக்கலாம் என்று கருதப்படுகின்றது.மேற்படி இளைஞர் குறித்த பெண்ணின் முறை பையன் என்றும் அவரின் வீட்டிலேயே பிரான்ஸிலிருந்து சென்ற பெண் வீட்டார் தங்கியிருந்துள்ளனர்.
இந்நிலையிலேயே மேற்படி சம்பவம் நடந்துள்ளது.தற்போது குறித்த இருவரையும் இரு வீட்டாரும் இணைந்து தேடி வருகின்றனர்.இருவரும் சீக்கிரமாக வீடு திரும்புவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.