இலங்கையில் அனைத்து வகையான விமான பயணச் சீட்டுகளுக்கான கட்டணங்கள் அதிகரிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான அறிவிப்பை சிவில் விமான போக்குவரத்து அதிகார சபை வெளியிட்டுள்ளது.

இது தொடர்பில் குறித்த அதிகார சபை மேலும் தெரிவித்துள்ளதாவது இலங்கையில் விநியோகிக்கப்படும் அனைத்து வகையான விமான பயணச்சீட்டு களுக்கான கட்டணங்கள் 27 சதவீதம் அதிகம் உள்ளன இன்று நள்ளிரவு முதல் இந்த நடவடிக்கை அமுலாக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

பிரான்ஸ் தமிழர் குடும் பத்துடன் தாயகம் திரும்புவதற்கான முதலே முன்பதிவு செய்யும் நோக்கில் சென்ற போதிலும் சொல்லப்பட்ட விலை அதிகம் இதை விட குறைவாக எடுக்கலாம் என்று காத்திருந்தார், தற்போது அறிவிக்கப்பட்ட விலைகளை பார்த்தால் பிரான்ஸ் தமிழர்கள் பலர் தாயகம் செல்லும் ஆசையையே கைவிட்டு விடுவார்கள் போல் தெரிகிறது.

இலங்கையில் விநியோகிக்கும் டிக்கெட்டுகள் என்று குறிப்பிடப்பட்டு இருந்தாலும் இலங்கை வெளிநாட்டு பயணிகள் மீது பெரும் வரி விதிப்பை ஒன்றை விதிக்கவோ அல்லது கட்டணங்களை உயர்த்தவோ வாய்ப்புள்ளது.