இரஷ்யா-உக்ரைன் மோதல் ஒரு பக்கம் வலுக்க, பிரான்ஸ்-பிரித்தானியா மோதலும் தற்போது சூடுபிடித்துள்ளது.

அண்மையில் உக்ரைனில் இருந்து பிரித்தானியாவுக்கு அகதிகளாகச் சென்றவர்களை அந்நாடு திருப்பி அனுப்பியிருந்தது. ‘பிரான்சுக்கோ பெல்ஜியத்துக்கோ செல்லுங்கள்’ என தெரிவித்து அகதிகளை கடலில் வைத்தே திருப்பி அனுப்பியிருந்தது பிரித்தானியா. பிரித்தானியாவின் பொறுப்பற்ற இந்த செயலை கண்டித்த பிரான்சின் உள்துறை அமைச்சர் Gérald Darmanin, ‘பிரித்தானியா ஒரு மனிதாபிமானமற்ற நாடு’ எனவும் விமர்சித்திருந்தார்.

இந்நிலையில், சற்று முன்னர் பிரித்தானியாவின் நீதித்துறை அமைச்சர் Dominic Raab , பிரான்சின் இந்த குற்றச்சாட்டுக்கு பதிலளித்துள்ளார்.

“நாங்கள் அகதிகளுக்கான அனைத்து கதவுகளையும் திறந்தால், உண்மையான அகதிகள்… உண்மையான புகலிடம் கோருபவர்களுக்கு உதவ முடியாமல் போகும். யாருக்கு உண்மையான உதவி தேவையோ அவர்களுக்கு வேண்டிய உதவிகளைச் செய்வோம்!” என அவர் பி. பி. சிக்கு தெரிவித்துள்ளார்.