நாளை திங்கட்கிழமை ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் Poissy (Yvelines) நகருக்கு பயணிக்க உள்ளார்.
இம்முறை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுகிற மக்ரோன், தனது முதலாவது தேர்தல் பரப்புரையை இங்கு மேற்கொள்ள உள்ளார். இங்கு மக்களைச் சந்தித்து அவர்களின் கேள்விகளுக்கு மக்ரோன் பதிலளிக்க உள்ளார். நாளை திங்கட்கிழமை மாலை 6.30 மணிக்கு இங்குள்ள centre de direction artistique அரங்கில் இந்த சந்திப்பு இடம்பெறுகின்றது.
முன்னதாக, தனது முதலாவது பரப்புரையை மார்செ நகரில் மேற்கொள்ள மக்ரோன் தீர்மானித்திருந்தார். ஆனால் இரஷ்ய-உக்ரைன் யுத்தத்தால் இந்த பரப்புரை நிகழ்வினை மக்ரோன் இரத்துச் செய்திருந்தார். அதையடுத்து கடிதம் ஒன்றிம் மூலம் தாம் ‘மீண்டும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதாக’ அறிவித்திருந்தார்.
இந்நிலையில், நாளை தனது முதலாவது தேர்தல் பரப்புரையை Poissy நகரில் மேற்கொள்கிறார்.