பிரான்ஸ்: எரிபொருள்களின் விலையில் லிட்டருக்கு 18 சென்ட் வரை தள்ளுபடி! அரசாங்கத்தால் வாக்குறுதியளிக்கப்பட்ட பம்பில் தள்ளுபடியானது ஒரு லிட்டர் எரிபொருளுக்கு வரி உட்பட 15 முதல் 18 சென்ட் வரை இருக்கும், இது பல்வேறு பிரெஞ்சு பிராந்தியங்களில் அமுல்படுத்தப்படும்.
இந்த தகவலை சுற்றுச்சூழல் அமைச்சகம் வெள்ளிக்கிழமை அறிவித்தது. இந்த தள்ளுபடி வெள்ளிக்கிழமை ஏப்ரல் 1 முதல் நடைமுறைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. பம்பில் ஒரு லிட்டர் எரிபொருளுக்கு 15 சென்டிம்கள் என்ற தள்ளுபடி அனைவருக்கும் பொருந்தும் என்பது குறிப்பிடத்தக்கது.
வரி தவிர்த்து 15 சென்ட் அடிப்படையில் தள்ளுபடி கணக்கிடப்படுகிறது, பெட்ரோலியப் பொருட்களுக்கு விதிக்கப்படும் VAT அளவைப் பொறுத்து தள்ளுபடி வேறுபடும் என்பது குறிப்பிடத்தக்கது. மெட்ரோபொலிட்டன் பிரான்சில் கண்டத்தில் VAT 20% ஆக இருப்பதால், பம்பில் உள்ள தள்ளுபடி நுகர்வோருக்கான வரி உட்பட லிட்டருக்கு 18 சென்ட்களாக இருக்கும்.
VAT 13% இருக்கும் கோர்சிகாவில் 17 சென்ட்களாகவும், பெட்ரோலியப் பொருட்களுக்கு VAT இல்லாத இடங்களில் 15 சென்ட்களாகவும் இருக்கும் என்று அமைச்சகம் விவரித்தது.அதிகரித்து வரும் எரிபொருள் விலைகள் மற்றும் ஜனாதிபதித் தேர்தலுக்கு ஒரு மாதத்திற்கும் குறைவான காலத்திற்குள், பிரதமர் ஜீன் காஸ்டெக்ஸ், ஏப்ரல் 1 முதல் நான்கு மாதங்களுக்கு இந்த தள்ளுபடியை மார்ச் நடுப்பகுதியில் அறிவித்தார்.
டீசல் மற்றும் பெட்ரோலுக்குப் பிறகு, எல்பிஜி மற்றும் எல்என்ஜிக்கு நீட்டிக்கப்பட்ட இந்த நடவடிக்கைக்கு மூன்று பில்லியன் யூரோக்கள் ஒதுக்கப்பட உள்ளது.திங்களன்று வெளியிடப்பட்ட உத்தியோகபூர்வ புள்ளிவிவரங்களின்படி, பிரெஞ்சு சேவை நிலையங்களில் விற்கப்படும் சாலை எரிபொருளின் விலை கடந்த வாரமாக சராசரியாக 2 யூரோக்களுக்கு கீழே சரிந்தது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து இது முதல் வீழ்ச்சியாகும்.