பிரான்ஸ்: ரோன் நகரில் ஒரு வயலில் ஒரு ஆணின் சடலம் எரிந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது! இதைத் தொடர்ந்து, விசாரணை ஒன்று தொடங்கப்பட்டது. வியாழன் மார்ச் 24 அன்று Thizy-les-Bourgs (Rhône) இல் ஒரு ஆணின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டது.

சுமார் பதினைந்து தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். முதல் கட்ட விசாரணையின் படி, உயிரற்ற உடல் அப்பகுதியைச் சேர்ந்த 70 வயது மனிதனுடையதாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
மேலும், உடலில் இருந்து நூறு மீட்டர் தொலைவில் ஒரு வாகனம் கண்டெடுக்கப்பட்டது. அது பாதிக்கப்பட்டவருக்கு சொந்தமானதாக இருக்கலாம் எனவும் காவல் துறை வட்டாரங்கள் சந்தேகிக்கின்றனர்.