பாடசாலை ஒன்றின் கழிவறையில் இருந்து மாணவன் ஒருவனின் சடலம் தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்டுள்ளது.

நேற்று வெள்ளிக்கிழமமை இச்சடலம் Montbrison (Loire) நகரில் உள்ள உயர்கல்வி பாடசாலை ஒன்றில் இருந்து மீட்கப்பட்டது. 17 வயதுடைய மாணவன் ஒருவன் தூக்கில் தொங்கி தற்கொலை செய்துகொண்டுள்ளான். ‘அவன் கடந்த சில நாட்களாக தீவிர மன உளைச்சலில் இருந்ததாக’ தற்கொலை செய்துகொண்ட மாணவனின் நண்பன் ஒருவன் தெரிவித்துள்ளான்.

பாடசாலையில் உடனடியாக உளநல சிகிச்சை மையம் ஒன்றி திறக்கப்பட்டது. மாணவனின் தற்கொலை சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.