உக்ரைனுக்கு ஆதரவு தெரிவிக்க பல அரசியல் தலைவர்கள் நேற்று பரிசில் ஒன்றிணைந்தனர்.

பரிசில் உள்ள Théâtre Antoine அரங்கில் இந்த சந்திப்பு இடம்பெற்றது. இதில் பரிஸ் நகர முதல்வர் Anne Hidalgo, இல் து பிரான்ஸ் மாகாண முதல்வர் Valérie Pécresse மற்றும் முன்னாள் ஜனாதிபதி François Hollande உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். அவர்கள் அனைவரும் இணைந்து உக்ரைனுக்கான தங்களது ஆதரவை தெரிவித்தனர். உக்ரைன் ஜனாதிபதி Volodymyr Zelensky உடன் வீடியோ அழைப்பை ஏற்படுத்தி அவருடன் உரையாடினார்கள். தங்களது ஆதரவை தெரிவித்தனர்.

இந்த நிகழ்வில்உக்ரைனைச் சேர்ந்த கவிஞர்கள், எழுத்தாளர்கள் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

முன்னாள் ஜனாதிபதி பிரான்சுவா ஒலோந்து ‘நான் ஒரு உக்ரேனியராக உணர்கிறேன்!’ என தெரிவித்து தனது ஆதரவினை வெளிப்படுத்தியிருந்தார்.