பிரான்சுக்கு அழைத்துவரப்பட்டுள்ள உக்ரைன் அகதிகளுக்கு தொடருந்து பயணத்தை இலவசமாக்கியுள்ளதாக SNCF அறிவித்துள்ளது.

SNCF இன் நிர்வாக இயக்குனர் (ECO) Jean-Pierre Farandou வெளியிட்ட அறிக்கையில் இதனை அறிவித்துள்ளார். உக்ரைனில் இருந்து பிரான்சுக்கு இதுவரை 100 வரையாக அகதிகள் அழைத்துவரப்பட்டுள்ளனர். அடுத்து வரும் நாட்களில் மேலும் பல அகதிகள் அழைத்துவரப்பட உள்ளனர். அதையடுத்து இந்த அகதிகள் பிரான்சுக்குள் பயணம் செய்ய TGV மற்றும் Intercités சேவைகளை இலவசமாக பயன்படுத்தலாம் என அறிவித்துள்ளார்.

இதேபோன்ற இலவச பயண ஏற்பாட்டினை போலந்து, ஜெர்மனி, ஒஸ்ரியா போன்ற நாடுகளும் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.