பீட்சா மூலமாக ஈ கோலை பாக்டீரியா தொற்று சிறுநீரக செயலிழப்பு கடந்த இரு வாரங்களில் சிறுவர்கள் பலர் இடையே ஏற்பட்ட சில நோய்களுக்கு குளிரில் பயணப்பட்ட ஒருவகை பீட்சா மூலம் பற்றிய ஈ கோலா பாக்டீரியா தான் காரணம் என்று கண்டறியப்பட்டுள்ளது.
இதனை அடுத்து குறிப்பிட்ட வகை உணவுகளை உட்கொள்ள வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடைகளிலும் வீடுகளிலும் இருந்து அவற்றை அப்புறப்படுத்தி அழிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. பிரான்சின் சுகாதார பணிப்பாளர் நாயகம் இந்த அறிவித்தலை விடுத்திருக்கின்றார்.
9 சிறுவர்கள் உட்பட நாடு முழுவதும் பிராந்தியங்களில் மொத்தம் 75 சிறுவர்களில் ஈ-கோலா தொடர்புடைய சிறுநீரகங்களை தாக்கும் நோய்க்குறிகள் தோன்றியுள்ளன.குறித்த நோய்க் குறிகளுக்கு பீட்சாவுக்கும் இடையில் தொடர்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதார பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
நெஸ்லே தயாரிப்பான குறித்த பீட்சாக்களை குளிரூட்டிகளில் வைத்திருப்போர் அவற்றை வீசிவிடும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். கடந்த சில நாட்களில் நிகழ்ந்த இது சிறுவர்களது மரணங்களுக்கு இந்த பாக்டீரியாவை காரணம் என்று சந்தேகிக்கப்படுகிறது. அது தொடர்பான மருத்துவ ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன.
ஈ கோலா பொதுவாக உணவு தண்ணீர் அவற்றில் காணப்படுகின்ற ஆபத்தில்லாத பாக்டீரியா ஆகும் ஆயினும் அது சில சமயங்களில் வயது குறைந்தவர்கள் சிறுநீரகப் பாதிப்புகளை ஏற்படுத்தி சில வேளைகளில் மரணத்தை ஏற்படுத்த கூடியது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.