இம்மானுவல் மக்ரோன் வாக்கு வீதம் நாளுக்கு நாள் அதிகரித்து செல்கின்றது. இன்று காலை வெளியான புதிய கருத்துக்கணிப்பின் படி மக்ரோன் 33.5% வீத வாக்குகளுடன் முன்ணிலையில் உள்ளார்.

கடந்த வாரத்தில், மக்ரோன் ஜனாதிபதி வேட்பாளராக தன்னை அறிவிக்கும் முன்னர், 25% வீத வாக்கு வீதத்துடன் இருந்தார். இந்நிலையில், இவ்வாரத்தில் தாம் இம்முறை தேர்தலிலும் போட்டியிடுவதாக அறிவித்ததோடு, திங்கட்கிழமை தனது முதலாவது தேர்தற் பிரச்சாரத்திலும் ஈடுபட்டார்.

அதையடுத்து, மக்ரோன் வாக்கு வீதம் அதிகரிக்க தொடங்கியுள்ளது. தற்போது மக்ரோன் முதலாவது சுற்றில் 33.5% வீத வாக்குகளை பெற்று அபார வெற்றி பெறுவார் என கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது.

இரண்டாவது இடத்தில் Marine Le Pen உள்ளர். அவர் 15% வீத வாக்குகளை மட்டுமே பெறுவார் எனவும் கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது.

****

அதேவேளை, ஜனாதிபதியை தேர்தெடுக்கும் இரண்டாம் சுற்று வாக்கெடுப்பிலும் மக்ரோன் அசைக்க முடியாத முன்ணிலையில் உள்ளார்.

இரண்டாம் சுற்றில் மக்ரோனும்-மரீன் லூ பென்னும் மோதுவார்கள் எனவும், அதில் 39% வீத வாக்குகளை மரீன் லூ பென் பெறுவார் எனவும், 61% வீத வாக்குகளைப் பெற்று மக்ரோனே மீண்டும் ஜனாதிபதியாக வருவார் எனவும் தெரியவந்துள்ளது.