PSG அணியின் உத்தியோகபூர்வ விற்பனைக் கூடம் ஒன்று அமெரிக்காவில் திறக்கப்பட உள்ளது.
பிரான்சின் தேசிய உதைபந்தாட்ட அணியான PSG அணி, தற்போது மிகப்பெரிய வணிக நிறுவனமாக மாறி வருகிறது. அதன் ஒரு அங்கமாக அமெரிக்காவில் காட்சியறையுடன் கூடிய புதிய விற்பனைக் கூடம் ஒன்றை திறக்க உள்ளது. மார்ச் 18 ஆம் திகதி இந்த விற்பனைக் கூடம் அமெரிக்கவின் New York நகரில் திறக்கப்படுகிறது.
இது பிரான்சுக்கு வெளியே திறக்கப்படும் மிகப்பெரிய காட்சியறையும்,
அமெரிக்காவில் திறக்கப்படும் இரண்டாவது விற்பனைக் கூடமும் ஆகும். முன்னதாக, சென்ற வருடம் Los Angeles நகரில் PSG விற்பனைக் கூடம் ஒன்று திறக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.