உக்ரைனில் இருந்து பிரான்சுக்கு 100,000 வரக்கூடும் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது.
உக்ரைன் - இரஷ்யா தாக்குதல் ஆரம்பித்ததில் இருந்து இதுவரை உக்ரைனில் இருந்து 2 மில்லியனுக்கும் அதிகமானோர் வெளியேறியுள்ளனர். பிரான்ஸ் உக்ரைன் அகதிகளை தொடர்ச்சியாக வரவேற்றுக்கொண்டுள்ளது. இதுவரை 7,000 அகதிகள் பிரான்சுக்கு அழைத்துவரப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், வரும் வாரத்தில் 50,000 இல் இருந்து 100,000 வரையான அகதிகள் பிரான்சுக்குள் வரக்கூடும் என ‘தற்காலிக அவசரகால பிரிவு’ (la cellule interministérielle de crise (CIC) இன் தலைவர் Joseph Zimet தெரிவித்துள்ளார். உக்ரைன் அகதிகள் பிரான்சுக்குள் அழைத்துவரப்படுவது/ குடியேற்றப்படுவது தொடர்பில் மேற்படி நிறுவனமே செயற்பட்டு வருகின்றது.
அதேவேளை, பிரான்சில் அகதிகள் தங்கவைக்க தேவையான இடங்கள் கைவசம் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.