Essonne மாவட்டத்தைச் சேர்ந்த மூன்று நகரங்களுக்கு இன்று திங்கட்கிழமை காலை குழாய் நீரை பருக வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Prunay-sur-Essonne, Buno-Bonnevaux மற்றும் Gironville-sur-Essonne ஆகிய மூன்று நகரங்களுக்கு இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. “இது ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கை!” என நீர் வழங்குனர்கள் தெரிவித்துள்ளனர்.

குறித்த நகரங்களில் வசிக்கும் மக்கள் மறு அறிவிப்பு வரை குழாய் நீரை பருகவோ, சமையலுக்கு பயன்படுத்தவோ வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

குழாய் நீரை பரிசோதிக்கும் நடவடிக்கை மிக வேகமாக இடம்பெற்று வருகின்றது