Bobigny நகரில் சற்று முன்னர் பாரிய தீ விபத்தொன்று ஏற்பட்டுள்ளது.
Henri Gautier பகுதியில் உள்ள சேமிப்பு கிடங்கு ஒன்றே தீப்பிடித்து எரிந்து வருகின்றது. 150 வரையான தீயணைப்பு படையினர் சம்பவ இடத்தில் குவிக்கப்பட்டுள்ளனர். தீ பரவலின் ஒரு பகுதி கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளதாக அறிய முடிகிறது.
தீ பரவியற்குரிய காரணம் எதுவும் அறிய முடியவில்லை. அதேவேளை, இவ்விபத்தில் எவரும் காயமடையவில்லை எனவும் அறிய முடிகிறது.