ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கு கட்டாயமாக மக்களால் தெரிவு செய்யப்பட்டவர்களின் ஆதரவுக் கையெழுத்துகள் 500 அவசியம். இந்தக் கையெழுத்துகள் நாட்டின் உச்ச அதிகார மையமான யாப்பு ஆலோசனை மையத்தினால் (Conseil constitutionnel) இனால் அங்கீகரிக்கப்படும். சில ஆதரவுக் கையெழுத்துகள் நிராகரிக்கப்படும்.
இந்த ஆதரவுக் கையெழுத்துக்களைச் சமர்ப்பிக்க இன்னமும் ஏறக்குறைய ஒரு வாரம் மட்டுமே உள்ளது.
இந் நிலையில் இந்த ஆதரவுக் கையெழுத்துக்கள் பற்றாக்குறையியினால் தேசியப் பேரணிக் கட்சியான Rassemblement National இன் தலைவி மரின் லூப்பன் தனது பிரச்சாரக் களத்தினை தற்காலிகமாக நிறுத்தி உள்ளார்.
இவரிற்கு இன்னமும் 40 கையெழுத்துக்கள் அவசியம் என்பதும் குறிப்பிடத்தக்கது.ப