டொனெட்ஸ்க், லுஹான்ஸ்க்
தனி நாட்டு அங்கீகாரத்துக்கு
நிக்கரகுவா, சிரியா ஆதரவு!
ரஷ்வைக் கண்டிப்பதைத் தவிர்த்து
புதுடில்லி அணிசாரா நிலைப்பாடு
மொஸ்கோ மீது மேற்கு நாடுகள்
சரமாரியாகத் தடைகள் விதிப்பு!!
உக்ரைனின் தன்னாதிக்கப் பகுதிகளான
டொனெட்ஸ்க், லுஹான்ஸ்க் இரண்டை
யும் சுதந்திர நாடுகளாக அறிவித்த புடி
னின் முடிவை நிக்கரகுவா, சிரியா நாடு
கள் ஆதரித்துள்ளன.
நிக்கரகுவாவின் முன்னாள் மார்க்சிஸ்ட் கெரில்லா போராளியும் தற்போதைய
அதிபருமாகிய டானியல் ஒர்டேகாவே
(Daniel Ortega) புடினின் பிரகடனத்தை
ஆதரித்த முதலாவது உலகத் தலைவர் ஆவார். ரஷ்யாவின் நீண்ட காலக் கூட் டாளியாகிய அவர் மத்திய அமெரிக்கா
வில் வோஷிங்டன் செல்வாக்குச் செலுத்
துவதைக் கடுமையாக எதிர்த்து வருபவர்.
தலைநகர் மனகுவாவில் பேசிய ஒர்டேகா
உக்ரைன் நேட்டோவில் இணைவது ரஷ்
யாவின் பாதுகாப்புக்கு மிகப் பெரிய அச்
சுறுத்தல் என்று தெரிவித்தார்.டொன்
பாஸ் பிராந்தியம் ரஷ்யாவால் சுதந்திர தேசங்களாக அறிவிக்கப்பட்டிருப்பதை சிரியாவும் வரவேற்றுள்ளது.
இதேசமயம்,உக்ரைன் நெருக்கடியில் இந்தியா,வழமை போன்று தனது அணி
சேராக் கொள்கையையே வெளிப்படுத்தி
யுள்ளது என்று மேற்குலக ஊடகங்கள்
கூறுகின்றன. ரஷ்யா மீது மேற்கு நாடு
கள் தடைகளை இறுக்கி வருகின்ற நிலையில் இந்தியாவும் உறுதியான ஒரு
நிலைப்பாட்டை அறிவிக்கும் என்று அமெ
ரிக்கா எதிர்பார்த்துள்ளது.ஐக்கிய நாடுக
ளின் பாதுகாப்புச் சபையில் உரையாற்
றிய இந்தியப் பிரதிநிதி, போர்ப் பதற்றம்
குறித்து இந்தியாவின் ஆழ்ந்த கவலை
யை வெளியிட்டாரே தவிர, உக்ரைனின்
பிராந்தியங்களைத் தனி நாடுகளாக அங்
கீகரித்த ரஷ்யாவின் நகர்வைக் கண்டிக்க
வில்லை.
இதேவேளை, மொஸ்கோவின் செயலி
னால் சீற்றமடைந்துள்ள அமெரிக்காவும், ஐரோப்பிய நாடுகளும் அதற்கு எதிர்
வினையாற்றத் தொடங்கியுள்ளன.ரஷ்
யாவில் இருந்து எரிவாயுவை மேற்கு
ஐரோப்பாவுக்கு எடுத்துவருகின்ற இரண்
டாவது குழாய் விநியோகத் திட்டத்தை
இயங்க அனுமதிப்பதை ஜேர்மனி இடை
நிறுத்தியிருக்கிறது."நோட் ஸ்ரிம் - 2" என்ற அந்தத் திட்டம் ரஷ்யப் பொருளா
தாரத்துக்கும் ஜேர்மனியின் எரிசக்தித்
தேவைகளுக்கும் மிக அவசியமானதா
கும்.அமெரிக்காவும், இங்கிலாந்தும் ரஷ்யாவின் முக்கிய வங்கிகளையும் புடினுக்கு ஆதரவான பிரமுகர்களையும் இலக்கு வைத்துத் தடைகளை அறிவித்
திருக்கின்றன.
இதேவேளை, உக்ரைன் அரசு நாடு முழுவதும் அவசர காலச் சட்டத்தைப் பிரகடனம் செய்வதற்குத் தயாராகிவ
ருகிறது. பொது மக்களுக்கான கட்டாய
இராணுவப் பயிற்சியையும் அது அமு
லுக்குக் கொண்டுவந்துள்ளது.