பரிசில் உள்ள Porte de la Villette நிலையத்தை மூடுவதற்கு தொழிற்சங்கம் ஒன்று கோரிக்கை வைத்துள்ளது.

UNSA-RATP தொழிற்சங்கமே இந்த கோரிக்கையை வைத்துள்ளது. பரிஸ் 19 ஆம் வட்டாரத்தில் உள்ள குறித்த தொடருந்து நிலையம் நீண்டநாட்களாக போதைப்பொருட்களுக்கு அடிமையானவர்களில் கூடாரமாக இருந்து வருகின்றது. குறித்த நிலையத்தை சுற்றியும், நடைமேடையிலும், அருகே உள்ள இடங்களிலும் போதைப்பொருளுக்கு அடிமையான கூட்டம் ஒன்று தங்கியுள்ளது. இதனால் இங்கு வரும் பயணிகள் பெரும் அச்சுறுத்தலுக்கு ஆளாகின்றனர்.

பயணிகள் தாக்கப்படுவதும், போக்குவரத்து தடைப்படுவதும் என கடந்த இரண்டு மாதங்களில் 23 சம்பவங்கள் இங்கு பதிவாகியுள்ளன.

பாதுகாப்பு நடவடிக்கை எதுவும் மேற்கொள்ளப்படவில்லை. எனவே தொடருந்து நிலையத்தை மூடிவிடுமாறு மேற்படி தொழிற்சங்கம் கோரிக்கை வைத்துள்ளது.