இரஷ்யா-உக்ரைன் நாடுகளுக்கிடையே யுத்தம் இடம்பெற்று வரும் நிலையில், தனது இராணுவத்தினை அனுப்ப உள்ளதாக சற்று முன்னர் பிரான்ஸ் அறிவித்துள்ளது.

NATO அமைப்பின் ஒரு அங்கமாக இந்த இராணுவத்தினர் அனுப்பப்பட உள்ளனர். NATO அமைப்பில் உக்ரைன் இல்லாத நிலையில், நேரடியாக உக்ரைனுக்கு பிரெஞ்சு இராணுவத்தை அனுப்ப முடியாது. எனவே உக்ரைனுக்கு மிக நெருக்கமான நாடான Estonia நாட்டின் எல்லைப் பிராந்தியத்துக்கு பிரான்ஸ் இராணுவத்தை அனுப்ப உள்ளது.

AMX 10 ரக கவசவாகனம், இரண்டு ரஃபேல் விமானங்கள், யுத்த விமானங்கள் என மொத்தமாக 500 இராணுவத்தினர் அங்கு அனுப்பப்பட உள்ளனர். மார்ச் மாத முதல் வாரத்தில் இராணுவத்தினர் அங்கு செல்ல இருப்பதாக அறிய முடிகிறது.