மக்ரோனின் கலந்துகொள்ள இருந்த தேர்தல் பரப்புரை கூட்டம் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வரும் சனிக்கிழமை மார்ச் 5 ஆம் திகதி இந்த பரப்புரை கூட்டம் Marseille நகரில் இடம்பெற இருந்தது. ஆனால் மக்ரோன் அன்றைய தினம் அங்கு பயணிக்கவில்லை என தெரிவிக்கப்பட்டு பரப்புரை கூட்டம் இரத்துச் செய்யப்பட்டுள்ளது.

உக்ரைன் மீது இரஷ்யா படையெடுத்துள்ளதை அடுத்து, பிரெஞ்சு ஜனாதிபதியாகவும் ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவராகவும் மிகவும் பரபரப்பாக இயங்கி வரும் மக்ரோன், பரப்புரை கூட்டத்தில் கலந்துகொள்ள விரும்பவில்லை என அவரது அரசியல் பரப்புரை ஏற்பாட்டுக் குழு அறிவித்துள்ளது.

அதேவேளை, இன்று திங்கட்கிழமை காலை வெளியான புதிய கருத்துக்கணிப்பில் இம்மானுவல் மக்ரோன் அதிக வாக்கு வீதத்துடன் தொடர்ந்தும் முதலிடத்தில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.