உக்ரைன் தலைநகர் Kiev இல் இன்னும் ஆயிரம் வரையான பிரெஞ்சு மக்கள் சிக்கிக்கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

உக்ரைனில் இருந்து மிக விரைவாக வெளியேறும் படி பிரான்சின் வெளியுறவுத்துறை அமைச்சர் Jean-Yves Le Drian இன்று காலை அறிவித்திருந்தார். தலைநகர் Kiev இல் இருந்து தரைவழிப்பாதையாக அவர்கள் வெளியேற முடியும் என தெரிவித்த அவர், அவர்களது பாதுகாப்பை எம்மால் உறுதிப்படுத்த முடியாமல் உள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.

“Kiev நகரில் இருந்து தெற்கு திசை நோக்கி தரவழிப்பாதை மூலம் வெளியேற முடியும். அது பாதுகாப்பான வழி. ஆயிரம் வரையான பிரெஞ்சு மக்கள் அங்கு இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது. அவர்கள் இரண்டில் இருந்து நான்கு நாட்களுக்குள் அவர்கள் வெளியேறமுடியும்!” எனவும் அமைச்சர் Jean-Yves Le Drian அறிவுறுத்தினார்.

“உக்ரைனில் உள்ள பொதுமக்கள் Kiev Vasylkiv நெடுஞ்சாலையூடான வெளியேறிய முடியும் - என இரஷ்யா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது என்பதையும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.