Île-Saint-Denis (93) நகரில் உள்ள பாடசாலை ஒன்றில் இருந்து துப்பாக்கி ஒன்று மீட்கப்பட்டுள்ளது.
Jean-Lurçat பாடசாலையில் இச்சம்பவம் கடந்த வியாழக்கிழமை இடம்பெற்றுள்ளது. இங்கு பயிலும் மாணவன் ஒருவன் இந்த துப்பாக்கியை பாடசாலையின் மரக்கறி தோட்டத்தில் இருந்து எடுத்துள்ளான். துப்பாக்கி சுடுதற்கு தயாராக இருக்கவில்லை என்பதால் பெரும் ஆபத்து தவிர்க்கப்பட்டது.
இச்சம்பவம் உடனடியாக பல விமர்சனங்களுக்கு உள்ளானது. பெற்றோர்கள் பலர் பாடசாலை நிர்வாகம் மீது முறைப்பாடு செய்தனர். மேற்படி துப்பாக்கி பாடசாலைக்கு வெளியே இருந்து வீசப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.
போதைப்பொருள் கடத்தல்காரர்கள் பயன்படுத்தும் பதிவு செய்யப்படாத துப்பாக்கி அது என தெரிவிக்கப்பட்டுள்ளது.