பிரான்சின் சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ள சுகாதாரக் கட்டுப்பாட்டு நீக்க அட்டவணை பெரும் விம்ர்சனத்திற்கு உள்ளாகி உள்ளது.
 
தடுப்பு ஊசி அட்டைகள் கட்டாயமாக்கப்பட்ட இடங்களிற்கு 28ம் திகதியிலிருந்து முகக்கவசங்கள் தேவையில்லை என்பதும், அதன் பின்னராக மார்ச் நடுப்பகுதியில் தொழில் இடங்களிலும் பொதுப் போக்குவரத்துகளிலும் கூட முக்கக்சவசத்தை நீக்குவதாகவும் ஒலிவியே வெரோன் தெரிவித்துள்ளார்.

இது மிகவும் ஆபத்தானதெனவும் அரசாங்கம் மிகவும் அவசரமாக அகலக் கால் வைக்கின்றதெனவும் பலரின் உயிர்களை பலிவாங்கிவிடும் எனவும் மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.
 
ஒமிக்ரோனின் வேறொரு தொற்று வடிவம் பிரான்சைத் தாக்க ஆரம்பிக்க இருக்கும் நிலையில் அரசாங்கம் தேர்தலை மட்டுமே கருத்திற்கொண்டு அவசர முடிவுகளை எடுக்கின்றது என எச்சரித்துள்ளனர்.