நான்காவது தடுப்பூசி போடுவதற்குரிய அவசியம் இல்லை என சுகாதார அமைச்சர் Olivier véran தெரிவித்துள்ளார்.

இன்று ஞாயிற்றுக்கிழமை அவர் இத்தகவலை தெரிவித்துள்ளார். அமைச்சர் Olivier véran மேலும் தெரிவிக்கையில், “நான்காவது தடுப்பூசி தற்போது தேவையில்லை என நான் நினைக்கின்றேன். இந்த இலையுதிர் காலத்தில் மீண்டும் கொரோனா தொற்று அதிவேகமாக பரவினால், நாங்கள் மக்களுக்கு அறிவிப்போம். ஆனால் தற்போது நான்காவது தடுப்பூசி தேவையில்லை என மருத்துவ துறை பரிந்துரை செய்துள்ளது!” என குறிப்பிட்டார்.

அதேபோன்று, அடுத்தடுத்த தடுப்பூசிகள் போடப்படுவது சில சந்தர்ப்பங்களிலேயே அவசியமாகின்றது எனவும், ஒவ்வொரு வருடமும் கட்டாயம் தடுப்பூசி போடத்தேவையில்லை எனவும் தெரிவித்தார்