ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் அமெரிக்க-ஜெர்மனிய ஜனாதிபதிகளுடன் உரையாட உள்ளார்.

சற்று முன்னர் இத்தகவலை ஜனாதிபதி மாளிகையான எலிசே இதனை அறிவித்துள்ளது. ‘இன்னும் சிலமணிநேரங்களில்’ இந்த உரையாடல் இடம்பெற உள்ளது. ஜெர்மன் தலைவர் Olaf Scholz மற்றும் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுடன் தொலைபேசி வழியாக உரையாட உள்ளார்.

இரஷ்யா-உக்ரைன் விவகாரம் தொடர்பான இந்த உரையாடல் அமைய உள்ளது.

இரஷ்ய-உக்ரைன் விவகாரத்தில் - ஐரோப்பிய ஒன்றிய தலைவராக ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் சமாதானத்தை ஏற்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றார். நேற்றைய தினம் உக்ரைன் ஜனாதிபதியை சந்தித்த மக்ரோன், இன்று காலை இரஷ்ய ஜனாதிபதி விளாதிமிர் புட்டினை சந்தித்தார்.

அதையடுத்தே, மேற்குறிப்பிட்ட இரு ஜனாதிபதிகளுடனும் மக்ரோன் கலந்துரையாட உள்ளார்.