உக்ரைனில் உள்ள பிரெஞ்சு மக்கள் உடனடியாக நாட்டை விட்டு வெளியேறும்படி அறிவிக்கப்பட்டுள்ளனர்.
நேற்று புதன்கிழமை மாலை இத்தகவலை வெளியுறவு அமைச்சகம் (ministère des Affaires) அறிவித்துள்ளது. உக்ரைன் மீது இரஷ்யா இன்று காலை முதல் தாக்குதல் நடத்துவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அதையடுத்து உக்ரைனை சிவப்பு வலையமாக அறிவித்துள்ள பிரான்ஸ், அங்கு தங்கியுள்ள பிரெஞ்சு மக்களை காலதாமதம் இன்றி அங்கிருந்து வெளியேறும் படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதேவேளை, உக்ரைக்கு செல்வதை தவிர்க்கும் படியும் வெளியுறவு அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. ‘மறு அறிவித்தல் வரை’ உக்ரைனுக்கு பயணிக்க வேண்டாம்!’ என அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.