நாளை, பெப்ரவரி 15 ஆம் திகதி முதல் கிட்டதட்ட 5 மில்லியன் பேரின் தடுப்பூசி அட்டைகள் செயலிழக்கின்றன.
இரண்டாவது தடுப்பூசியில் இருந்து மூன்றாவது தடுப்பூசி போடுவதற்கான கால அவகாசம் 7 மாதங்களில் இருந்து நான்கு மாதங்களாக குறைக்கப்படுகின்றது. நாளை பெப்ரவரி 15 ஆம் திகதியில் இருந்து இந்த சட்டம் நடைமுறைக்கு வருகின்றது.
இதனால் இரண்டாவது தடுப்பூசி போட்டு நான்கு மாதங்கள் நிறைவடைந்தவர்கள் இதுவரை மூன்றாவது தடுபூசியினை போட்டுக்கொள்ளவில்லையென்றால் அவர்களுக்கான தடுப்பூசி அட்டை (pass vaccinal) செயலிழந்து போகும்.
நாளை செவ்வாய்க்கிழமை முதல் கிட்டத்தட்ட 5 மில்லியன் பேரின் தடுப்பூசி அட்டைகள் இவ்வாறு செயலிழக்கின்றன.
அதேவேளை,
இரண்டு தடுப்பூசிகள் போட்டுக்கொண்டதன் பின்னர் ஒருவர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியிருந்தால் (ஆவணங்கள் கண்டிப்பாக தேவை) அவர்கள் மூன்றாவது தடுப்பூசி போடத்தேவையில்லை எனவும், அவர்களுடைய தடுப்பூசி அட்டை தொடர்ந்தும் செயற்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.