இவ்வருடம் எப்ரலில் இடம்பெற இருந்த La foire Art Paris கண்காட்சி பிற்போடப்பட்டுள்ளது. 
 
ஏப்ரல் 8 ஆம் திகதியில் இருந்து 11 ஆம் திகதி வரை பரிசில் இடம்பெற இருந்த இந்த ஓவிய கண்காட்சி வரும் செப்டம்பர் மாதம் 9 ஆம் திகதியில் இருந்து 12 ஆம் திகதி வரை இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
கடந்த வருட La foire Art Paris கண்காட்சியில் 112 ஓவியங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது. இம்முறை 20 நாடுகளில் இருந்து 140 ஓவியங்கள் கொண்டுவரப்படும் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது.