பிரித்தானிய வகையைச் சேர்ந்த கொரோனா வைரஸ் பிரான்சில் வேகமாக பரவி வருகின்றது. குறிப்பாக இல் து பிரான்சின்  கிழக்கு பகுதிகளில் மிக தீவிரமாக பரவி வருகின்றது. 
 
இல் து பிரான்ஸ் மாகாணத்துக்குள் இந்த பிரித்தானிய வைரஸ் 32% வீதமாக அதிகரித்துள்ளது. கடந்த வாரத்தில் இந்த தொற்று 27% வீதமாக இருந்தது. அதேவேளை இல் து பிரான்சின் கிழக்கு பகுதிகளில் இருவரில் ஒருவருக்கு அதாவது 50 % வீதமான தொற்று பிரித்தானிய வைரசாக பதிவாகின்றது. 
 
மேற்று இல் து பிரான்சின் தொற்று வீதம் 32% வீதமாகவும், வடக்கு இல் து பிரான்சில் 20% வீதமாகவும் உள்ளது. 
 
தலைநகர் பரிசில் அடையாளம் காணப்படும் கொரோனா வைரசில், 37.9% வீதமானவை பிரித்தானிய வைரஸ் என்பது குறிப்பிடத்தகது.