2021 ஆம் ஆண்டு ஆரம்பித்ததில் இருந்து ஒரே நேரத்தில் பதிவான அதிகபட்ச மின் பாவனை நேற்று முன்தினம் புதன்கிழமை (பெப்ரவரி 10) மாலை 7.15 மணிக்கு பதிவானது. கிட்டத்தட்ட 14,558 மெகா வாட்ஸ் மின்சாரம் இல் து பிரான்ஸ் மக்களால் பயன்படுத்தப்பட்டது.
<<இது மிக அதிகளவான மின்பாவனை தான். ஆனால் இதனால் மின் வழங்குவதில் ஆபத்துக்கள் ஏதுமில்லை!>> என RTE (மின் வாரியம்) உறுதி செய்துள்ளது.
அதிகபட்ச பனிப்பொழிவு, உறை குளிர் காரணமாக மக்கள் இந்த மின்சாரத்தை பயன்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதற்கு முந்தைய சாதனையாக 2018 ஆம் ஆண்டில் 15,000 மெகா வாட்ஸ் மின்சாரத்தை இல் து பிரான்ஸ் மக்கள் பயன்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.