பிரான்சில் முதல் கொரோனா தொற்று ஏற்பட்டு ஒருவருடத்தை கடந்துள்ளது. இதுவரை 80.000 இற்கும் மேற்பட்டோர் சாவடைந்துள்ளனர். முதலாவது அலை நிறைவடைந்து இரண்டாம் அலை முடிவடைந்து தற்போது மூன்றாம் கட்டத்தை நோக்கி பயணித்துக்கொண்டுள்ளோம். 

பிரான்சில் பரவியுள்ள கொரோனா வைரஸ் தொடர்பில் இதுவரை வெளியாகாத சில முக்கிய தகவல்கள் இதோ; 

கொரோனா வைரஸ் அனைவரையும் ஒரே போன்று தாக்குவதில்லை. ஒரே போன்று 'கொல்வதும் இல்லை!' 

பிரான்சில் இதுவரை கொரோனா தொற்றினால் அதிகம் பாதிக்கப்பட்டவர்கள் ஆண்களே. சாவடைவதற்குரிய வாய்புகள் அதிகம் கொண்டவர்களும் ஆண்களே. அதுவும் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இரண்டு மடங்கு வேகத்தில் சாவு அவர்களை நெருங்குகின்றது. 12 வருடங்கள் ஆண்களின் ஆயுள் காலத்தை குறைக்கிறது கொரோனா வைரஸ்.

[இத்தகவல் l'Agence du médicament (ANSM) மற்றும் l'Assurance maladie (Cnam) ஆகிய இரு நிறுவனங்களும் இணைந்து மேற்கொண்ட ஆய்வுகளில் தெரியவந்துள்ளது. 2020 ஆம் ஆண்டின் பெப்ரவரி 15 தொடக்கம் ஜூன் 15 வரையான காலப்பகுதியில் கிட்டத்தட்ட 66 மில்லியன் பிரெஞ்சு மக்களிடம் மேற்கொண்ட ஆய்வுகளில் இத்தகவல் உறுதி செய்யப்பட்டுள்ளது] 

அதேவேளை, பெண்களை சாவு அவ்வளவு எளிதில் நெருங்குவதில்லை எனவும் ஆய்வுகளின் முடிவு தெரிவிக்கின்றது. அவர்களுக்கு 2.1 வயது ஆயுள் காலத்தையே கொரோனா குறைக்கின்றது. 

சரி யாருக்கெல்லாம் தொற்றும் சாவும் வேகமாக ஏற்படுகின்றது?? 

ஜெனடிக் டிஸ்சோடர் என அழைக்கப்படும் பிறப்பிலேயே மரபணு குறைபாடு உள்ளவர்களுக்கும்,

மனநல குறைபாடு உள்ளவர்களுக்கும், 

Cystic fibrosis என அழைக்கப்படும் நுரையீரல் மற்றும் சுவாச குறைபாடு உள்ளவர்கள், 

இறுதி கட்டத்தில் உள்ள நாள்பட்ட சிறுநீரக குறைபாடு உள்ளவர்கள், 

மிக தீவிரமான நுரையீரல் புற்றுநோய் உள்ளவர்கள், 

இருதய, நுரையீரல் மாற்றம் செய்திருந்தவர்கள்

ஆகியோருக்கு பிரான்சில் அதிகமாக தொற்று ஏற்பட்டுள்ளதாகவும், அவர்களுக்கே சாவு விரைவில் நெருங்குகிறது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

[அனைவரும் முகக்கவசம் அணிவோம், இடைவெளிகளை கடைப்பிடிப்போம் என்பதே தற்போது கடைப்பிடிக்கக்கூடிய அதிகபட்ச எச்சரிக்கையாகும்!]