நோர்து-டேம் தேவாலய திருத்தப்பணி குறிக்கப்பட்ட திகதியில் இருந்து மேலும் ஒருவருடம் தாமதமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
2024 ஆம் ஆண்டில் நிறைவடையும் என தெரிவிக்கப்பட்டிருந்த நோர்து-டேம் தேவால திருத்தப்பணி, தற்போது மேலும் ஒரு வருடம் தாமதமாக 2025 ஆம் ஆண்டிலேயே நிறைவடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பரிசின் முதல் துணை முதவர் Emmanuel Grégoire நேற்று புதன்கிழமை இத்தகவலை தெரிவித்தார்.
 
2024 ஆம் ஆண்டில் ஒலிம்பிக் போட்டிகள் பரிசில் இடம்பெற திட்டமிடப்பட்டுள்ளமை வாசகர்கள் அறிந்ததே. ஒலிம்பிக் போட்டிகளுக்குரிய ஏற்பாடுகளின் காரணமாக இந்த நோர்து-டேம் திருத்தப்பணிகள் தாமதமாக்கப்படுகின்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
அதேவேளை, பரிஸ் நகரசபையினால் நோர்து-டேம் தேவாலய திருத்தப்பணிகளுக்காக €50 மில்லியன் யூரோக்கள் வழங்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.