பாடசாலைகளில் கொரோனா தொற்று மிக தீவிரமாக பரவி வருகின்றது. குறிப்பாக கடந்த ஒரே வாரத்தில் தொற்று இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது. 
 
இதுவரை 1.600 வகுப்புகள் கொரோனா வைரஸ் காரணமாக மூடப்பட்டுள்ளன. 103 பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன. குறிப்பாக Lille, Versailles, Reims, Nancy-Metz, Strasbourg, Orléans-Tours, Toulouse, Montpellier, Aix-Marseille மற்றும் Nice ஆகிய நகரங்களில் உள்ள பாடசாலைகளில் தொற்று தீவிரமாக பரவி வருவதாக இன்று வெள்ளிக்கிழமை (பெப்ரவரி 12) le ministère de l'Education nationale அறிவித்துள்ளது. 
 
இதில் குறிப்பாக கடந்த ஒரே வாரத்தில் தொற்று இரண்டு மடங்காக அதிகரித்து 934 வகுப்பறைகள் மூடப்பட்டுள்ளன. 
 
இதுவரை 10,390 மாணவர்கள் பாடசாலைகளில் தொற்றுக்குள்ளானதுடன் 1.308 ஆசிரியர்களும் தொற்றுக்குள்ளாகியுள்ளனர்.