தற்போது பிரெஞ்சு சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் பயங்கரவாதி ஒருவனுக்கு ஆண்டுதோறும் €433.000 யூரோக்கள் செலவாகிறதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
நவம்பர் 13 தாக்குதலின் முக்கிய குற்றவாளியான சாலா அப்துல்சலாமுக்கே இந்த தொகையுடைய பணம் செலவாகின்றது. கிட்டத்தட்ட மாதம் ஒன்றுக்கு அவனுக்கு €36,000 யூரோக்கள் வீதம், வருடத்துக்கு €433.000 யூரோக்கள் செலவாகின்றதாகவும், பிரான்சில் உள்ள அதிக செலவீனமுடைய 'சிறைக்கைதி' இவன் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
குறித்த சிறைக்கைதிக்கு எட்டு பாதுகாப்பு அதிகாரிகள், கண்காணிப்பு கேமராக்கள் உள்ளிட்ட எராளமான பாதுகாப்பு அம்சங்களால் இந்த தொகை ஆண்டு தோறும் செல்வாகின்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
*நவம்பர் 13 (2015) தாக்குதலில் 130 பேர் கொல்லப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.