கிட்டத்தட்ட பத்து வரையான சமூகக்கொடுப்பனவுகள் குறிப்பிடத்தக்க அளவு அதிகரிக்கப்பட உள்ளன. பணவீக்கத்தை கருத்தில் கொண்டு இந்த அதிகரிப்பு இடம்பெற உள்ளது. 

தனி ஒரு நபருக்கான  RSA கொடுப்பனவுகள் €607.5 யூரோக்களில் இருந்து 635.71 யூரோக்களாக அதிகரிக்கப்பட உள்ளது. 

இரண்டு பிள்ளைகள் உள்ள குடும்பத்தினருக்கு பிள்ளை ஒன்றுக்கு வழங்கப்படும் €141.99 யூரோக்கள் ஏப்ரல் 1 முதல் €148.52 யூரோக்களாக அதிகரிக்கப்பட உள்ளது. 

இதுபோன்று மாற்று திறனாளிகளுக்கான கொடுப்பனவுகள், வேலை தேடுவோருக்கான கொடுப்பனவுகள் என பத்து வரையான சமூக கொடுப்பனவுகள் ஏப்ரல் 1 ஆம் திகதி முதல் அதிகரிக்கப்பட உள்ளன.