இந்தியாவின் குடியரசு தின விழாவில் கலந்துகொள்வதற்காக 25 ஆம் திகதி பிற்பகல் ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டிருந்தார்.

இந்திய பிரதமர் நரேந்திர மோடியினை சந்தித்து, உரையாடியதுடன், ஜெர்பூர் நகரையும் சுற்றிப்பார்வையிட்டார். பின்னர் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற குடியரசு தின நிகழ்வில் கலந்துகொண்டிருந்தார். இந்தியாவின் ஜனாதிபதி முர்முவினையும் சந்தித்து உரையாடியிருந்தார்.

அவரது இந்திய பயணத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களின் தொகுப்பு இது.