ஞாயிற்றுக்கிழமை காலை பாரிஸில் Leonardo da Vinci யின் தலைசிறந்த படைப்பான Mona Lisa ஓவியத்தின் மீது இரண்டு பெண்கள் Soup இனை வீசி எறிந்துள்ளன.இதற்கு காரணமாக அந்த பெண்கள் கூறியது; விவசாயிகளின் பிரச்சினை விட இந்த கலை முக்கியமானதா ஆரோக்கியமான நிலையான உணவுக்கான உரிமை தான் முக்கியம். நமது விவசாய முறை ஆபத்தானது என்று இரண்டு பெண்கள் கூச்சலிட்டனர்.

புகழ்பெற்ற ஓவியத்தைச் சுற்றியுள்ள தடுப்புகளை தான்டி உட் சென்ற பிறகு, இரண்டு பெண்களும் பலத்த குரலில் கோஷம் போட்டனர்.இப் பிரச்சினைகு பின் அருங்காட்சியகம் ஒரு நெருக்கடிப் பிரிவைச் செயல்படுத்தி பார்வையாளர்கள் வெளியேற்றப்பட்டனர்.ஒரு மணிநேரம் சுத்தம் செய்வதற்காக அருங்காட்சியகம் மூடப்பட்டது, பின்னர் காலை 11:30 மணியளவில் மீண்டும் திறக்கப்பட்டது. ஓவியதை பொறுத்தவரை, “வேலைக்கு எந்த சேதமும் ஏற்படவில்லை” என்று அதிகாரிகள் கூறினார்கள்.