இவ்வருடத்தின் ஜூன் மாதம், வரலாற்றில் இதுவரை இல்லாத அளவு வெப்பம் நிறைந்த மாதமாக பதிவாகியுள்ளது.
தலைநகர் பரிசில் இந்த வெப்பம் பதிவாகியுள்ளது. இவ்வருடத்தின் ஜூன் மாதத்தில் பரிசில் 22.4°C வெப்பம் சராசரியாக பதிவானது. இந்த வெப்பமானது ஜூன் மாதம் ஒன்றில் நிலவும் வெப்பத்தினை விட (1990-2020 ஆண்டுப்பகுதியுடன் ஒப்பிடுகையில்) 3.6°C அதிகமாகும்.
ஜூன் 25 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை Yvelines நகரில் 35°C வெப்பம் பதிவாகியிருந்தது. Porte de Vincennes பகுதியில் 34.8°C வெப்பம் பதிவாகியிருந்தது. குறித்த வெப்பமானது ஜூன் மாதத்தில் பதிவாகும் சராசரி வெப்பத்தை விட 10°C அதிகமாகும்.
அதேவேளை, தலைநகர் பரிசில் கடந்த 10 ஆண்டுகளில் அதீத வெப்பம் காரணமாக 33,000 பேர் உயிரிழந்ததாகவும் கணக்கிடப்பட்டுள்ளது