இன்று மாலை ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் பிரதமர் Elisabeth Borne இனைச் சந்திக்கிறார். நாட்டில் நிலவி வரும் இரவு நேர வன்முறைச் சம்பவங்கள் தொடர்பாக இந்த சந்திப்பு இடம்பெற உள்ளது.
இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை 7.30 மணி அளவில் இந்த சந்திப்பு ஜனாதிபதி மாளிகையான எலிசேயில் இடம்பெற உள்ளது. ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன், பிரதமர் Elisabeth Borne உடன், உள்துறை அமைச்சர் Gérald Darmanin ம் உடன் கலந்துகொள்கிறார்.
கடந்த ஐந்து நாட்களாக நாட்டில் இடம்பெற்று வரும் வன்முறைகளில் பலத்த சேதங்கள் ஏற்படடுள்ளன. காவல்துறையினர் பலரும் காயமடைந்துள்ளனர். பொதுச் சொத்துக்கள் பலவும் சேதமடைந்துள்ளன. இந்நிலையில் அது தொடர்பான கணக்கெடுப்புக்களை ஜனாதிபதியிடம் பிரதமர் சமர்ப்பிக்க உள்ளதாக அறிய முடிகிறது.