Bobigny நகரில் உள்ள கல்லூரி ஒன்றுக்கு வெடிகுண்டு அச்சுறுத்தல் விடுக்கப்பட்ட நிலையில், காவல்துறையினர் தீவிர தேடுதல் வேட்டையை மேற்கொண்டனர்.
Delaune கல்லூரிக்கே இந்த அச்சுறுத்தல் மின்னஞ்சல் மூலம் விடுக்கப்பட்டிருந்தது. உடனடியாக காவல்துறையினர் அழைக்கப்பட்டு கல்லூரி வளாகம் முழுவதும் தேடப்பட்டது.
வெடிகுண்டு அகற்றும் அதிகாரிகள், மோப்ப நாய் உதவியுடன் கல்லூரி முழுவதும் காலை 8 மணி முதல் தேடுதல் வேட்டையை மேற்கொண்டனர். 30 அதிகாரிகள் வரை இணைந்து மேற்கொண்ட இந்த தேடுதலில், சந்தேகத்துக்கிடமான பொருட்கள் எதுவும் சிக்கவில்லை.
மின்னஞ்சலில் வந்த அச்சுறுத்தல் தொடர்பான விசாரணைகள் இடம்பெற்று வருகிறது.