நேற்று ஞாயிற்றுக்கிழமை நண்பகலுக்குப் பின்னர் இல் து பிரான்சின் பல்வேறு பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்தது. குறிப்பாக நீண்ட நாட்களாக மழைக்கு காத்திருத்த பரிஸ் மக்கள் நேற்று பெய்த மழையினால் வெள்ளப்பெருக்கினை சந்தித்துள்ளனர்.
பரிஸ் 19 ஆம் வட்டாரத்தில் 10 நிமிடங்களில் 20 மில்லிமீற்றர் அளவு அடைமழை பெய்தது. Montreuil பகுதியில் வெள்ளம் பாய்ந்தது.
புறநகர்ப்பகுதிகளான Noisy-le-Sec மற்றும் Bobigny ஆகிய நகர வீதிகளில் பெரும் மழை கொட்டித்தீர்த்தது. A86 நெடுஞ்சாலையில் வெள்ளம் பாந்து போக்குவரத்தை பாதித்தது. மகிழுந்துகள் சில கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகிச் சென்றுள்ளதாக பதிவாகியுள்ளது.
தீயணைப்பு படையினர் பல்வேறு மீட்புப்பணிகளில் ஈடுபட்டனர். நேற்று மாலை மட்டும் இல் து பிரான்சுக்குள் 140 மீட்புப்பணிகளை மேற்கொண்டிருந்தனர்.
*****
தலைநகர் பரிசில் கடந்த மூன்று வாரங்களின் பின்னர் நேற்றைய தினம் மழை பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தது.