ஜூலை மாதமளவில் நூற்றுக்கணக்கான பொருட்களின் விலை வீழ்ச்சியடையும் என பொருளாதார அமைச்சர் Bruno Le Maire நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

பணவீக்கம் மெல்ல மெல்ல வலுவிழக்கும் நிலையில், பால் உள்ளிட்ட உணவுப்பொருட்களின் விலைகள் வீழ்ச்சியடைய உள்ளன. நூறு வரையான உணவுப்பொருட்கள் இந்த பட்டியலில் உள்ளன.

அதேவேளை, பொருட்களின் விலையினை குறைக்காத விற்பனையாளர்கள் மீது நடவடிக்கையும் எடுக்கப்படும் எனவும் அமைச்சர் Bruno Le Maire அறிவித்துள்ளார்.

கடந்த ஒரு வருடத்தில் பிரான்சில் பொதுவான பயன்பாட்டுப் பொருட்களின் விலை 5.1% சதவீதத்தாலும், உணவுப்பொருட்களின் விலை 14.1% வீதத்தாலும் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.