Aubervilliers (Seine-Saint-Denis) நகரில் உள்ள சேமிப்பகம் ஒன்றில் தீ பரவி முற்றாக சேதமடைந்துள்ளது.
இன்று செவ்வாய்க்கிழமை காலை இத்தீவிபத்து இடம்பெற்றுள்ளது. Rafco Valège ஆடை விற்பனை நிறுவனத்துக்கு சொந்தமான சேமிப்பகம் ஒன்றில் தீ பரவியுள்ளது. தீயணைப்பு படையினர் விரைவாக வந்து தீயை அணைக்க போராடினர்.
சேமிப்பகத்தில் இருந்த 35 ஊழியர்கள் வெளியேற்றப்பட்டனர். பல மில்லியன் மதிப்புள்ள ஆடைகள் எரிந்து சேதமடைந்துள்ளன.
5,000 m2 சதுர மீற்றர் பரப்பளவுள்ள சேமிப்பகம் தீப்பிடித்து எரிந்ததில் பாரிய கரும்புகை எழுந்தது. வீதி போக்குவரத்தும் தடைப்பட்டது.