நேற்றைய தினம் பாரீசு லாச்சப்பல் இலங்கை இந்திய வர்தக சங்கத்தினரால்   அயலவர் விழா ( La Fētè des Voisins ) மிக சிறப்பாக நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.
அவ் சுற்றாடலில் வாழும் பிரெஞ்சு தேசத்து மக்கள் உட்பட பல்லின மக்களும் நட்போடு கலந்து சிறப்பித்திருந்தமை அழகே...
 நிகழவின் சிற்பம்சமாக பாரீசில் 20 வெதுப்பகம் நடாத்தி பாண் தயாரிப்பில் இவ் வருடத்திற்கான முதலாம் இடத்தை தட்டிகொண்டு எமக்கான பெருமையைத் தந்துள்ள தர்ஷன் அவர்களும் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டு மாண்பேற்றபட்டர்...
தர்ஷன் பிரான்சின் ஜனாதிபதி மாளிகைக்கு 24 ம் ஆண்டு மே மாதம்வரையில் பாண் வழங்கும் அதிஷ்டத்தை பெற்றுக் கொண்டவர் என்பதும் பெருமையே...
இன்றய நிகழ்வானது மாலை சிற்றுண்டியுடன் ஆரம்பித்து இராப்போசனத்துடன் இனிதே நிறைவுற்றது...
வர்த்தக சங்கம் முதல் முறையாக நடத்தியமை குறிப்பிடத்தக்கது....


.