பரிசில் இன்று புதன்கிழமை நண்பகல் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.
பிற்பகல் 3 மணி அளவில் boulevard de Courcelles பகுதியில் இத்துப்பாக்கிச்சூடு இடம்பெற்றது. 20 வயதுடைய இளைஞன் ஒருவர் இரு நபர்களால் வீதியில் துரத்தப்பட்டு தாக்கப்பட்டுள்ளார். பின்னர் இளைஞனை துப்பாக்கியால் சுட்டுவிட்டு அங்கிருந்து தப்பி ஓடினர்.
SAMU மருத்துவக்குழுவினர் அழைக்கப்பட்டு முதலுதவி சிகிச்சைகள் அளிக்கப்பட்டது. ஆனால் அது பலனளிக்கவில்லை. மாலை 4.30 மணி அளவில் இளைஞன் பலியானார்
தாக்குதல் நடத்தியவர்கள் மோட்டார் சைக்கிள்களில் ஏறி தப்பி ஓடியிருந்தார்கள்.
சில நிமிடங்கள் கழித்து அவர்கள் பயன்படுத்திய மோட்டார் சைக்கிள்கள் Châtenay-Malabry (Hauts-de-Seine) நகரில் வைத்து எரியூட்டப்பட்டிருந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். விசாரணைகள் இடம்பெற்று வருகிறது.