ஈஃபிள் கோபுரத்தின் கீழ் சிறிய காவல்நிலையம் ஒன்றை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

சுற்றுலாப்பயணிகளை இலக்குவைத்து மேற்கொள்ளப்படும் கொள்ளைகள், மோசடிகள், போலி விற்பனை பொருட்கள் போன்றவற்றை தடுக்கும் முயற்சியாக இந்த காவல்நிலையம் அமைக்கப்பட உள்ளது.

நேற்று வெள்ளிக்கிழமை ஈஃபிள் கோபுரத்திற்கு விஜயம் மேற்கொண்ட காவல்துறை தலைமையதிகாரி Laurent Nuñez, அங்கு வைத்து இதனை அறிவித்தார். சுற்றுலாப்பயணிகள் அதிகளவில் கூடும் Champ-de-Mars மற்றும் Trocadéro ஆகிய பகுதிகளில் கண்காணிப்பு பலப்படுத்தும் நோக்கில் இது அமைக்கப்பட உள்ளதாக அவர் தெரிவித்தார்.

காவல்நிலையம் ஜூன் மாத ஆரம்பத்தில் அமைக்கப்படும்.