உக்ரேன் இராணுவ வீரர்களுக்கு பிரெஞ்சு இராணுவம் போர் விமான பயிற்சி அளிக்க உள்ளது.

ஜப்பானில் தற்போது இடம்பெற்றுக்கொண்டிருக்கும் G7 மாநாட்டில் பங்கேற்ற உக்ரேன் ஜனாதிபதி Volodymyr Zelensky, அங்கு வைத்து பிரான்சின் ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோனைச் சந்தித்தார். இருவரும் மதிய உணவை ஒன்றாக அமர்ந்து அருந்தினர். அதன் பின்னர் மேற்படி விடயம் தொடர்பாக Volodymyr Zelensky சில தகவல்களை வெளியிட்டார்.

"உக்ரேனில் அமைதியை உருவாக்க பிரான்சின் உதவி அவசியம் தேவை. பிரான்ஸ் உக்ரேன் இராணுவத்தினருக்கு போன் விமான பயிற்சியளிக்கும்! மேலும் இந்த G7 மாநாடு பல்நாட்டு தலைவர்களை சந்திக்க உதவியாக இருந்தது” என தெரிவித்தார்.